Published : 26 Mar 2019 11:53 AM
Last Updated : 26 Mar 2019 11:53 AM

வேலை வேண்டுமா? - அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்

த மிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் (Computer Instructor-Grade-1) பதவியில் 814 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு இணையானது. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் நடத்தவிருக்கிறது.

தகுதி; தேர்வு விவரம்

இத்தேர்வு முதல்முறையாக ஆன்லைன் வழியில் நடத்தப்படவிருக்கிறது. அனேகமாக மே மாதம் தேர்வு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. பி.எட். பட்டம் பெற்ற எம்.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி), எம்.சி.ஏ. பட்டதாரி களும், எம்.டெக்., எம்.இ. பட்டதாரிகளும் (கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினீயரிங்) கணினி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகுப்பினருக்கும் பொருந்தும்.

நேர்முகத்தேர்வு கிடையாது.  எனவே, எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே கணினி ஆசிரியர் வேலை உறுதி. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைத் (முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட்.) தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். 

உரிய கல்வித் தகுதி உடையவர்கள் ஆன்லைனில் விண்ணக்க வேண்டும். கூடுதல் தகவல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x