Published : 25 Mar 2019 11:42 AM
Last Updated : 25 Mar 2019 11:42 AM

மாஸ் காட்டும் எர்டிகா ஸ்போர்ட்

மல்டி யுடிலிட்டி பிரிவில் அனைவரின் மனதையும் கவர்ந்த கார் மாருதி எர்டிகா. இனோவா போல இல்லாவிட்டாலும், குறைவில்லாத செயல்பாடு, போதுமான இடவசதி, குறைவான விலை என எர்டிகா கார் பிரியர்களுக்குப் பிடித்துப் போக காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்போது இந்த எர்டிகா இன்னும் கூடுதல் சிறப்பு பெற்றிருக்கிறது. ஏற்கெனவே இரண்டாம் தலைமுறை எர்டிகாவை அறிமுகப்படுத்தி அசத்திய மாருதி சுசூகி நிறுவனம் புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

டியூயல் டோன் இன்டீரியர், ஃபாக்ஸ் வுட்டும், கிரே பிளாஸ்டிக் பினிஷும் கொடுக்கப்பட்ட டேஷ்போர்டு மற்றும் கதவுகள் என உட்புறம் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எர்டிகா ஸ்போர்ட்டில், இந்தோனேசிய சந்தையில் உள்ள டாப் செயல்திறன்கள், வசதிகள் உள்ள எர்டிகா வெர்ஷனின் அனைத்தும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. கியர் பாக்ஸை பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.  

வெளிப்புற வடிவமைப்பும் ஸ்போர்ட்டி லுக்குக்கு எந்தக் குறையும் இல்லாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க கிரில், ஃபாக் லைட், சின் ஸ்பாய்லர் ஆகியவற்றைச் சுற்றி சில்வர் ஹைலைட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் டோன் அலாய் சக்கரங்கள் உள்ளன. பின்புற பம்பர் ஒரு டிஃபியூசரைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x