Published : 04 Mar 2019 10:59 AM
Last Updated : 04 Mar 2019 10:59 AM

டாடா உருவாக்கும் பிளாக்பேர்ட் எஸ்யுவி

தொடர்ந்து பல புதிய கார்களின் அறிமுகங்கள். புதிய தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சிகள் என  டாடா மோட்டார்ஸ் ஆட்டோமொபைல் சந்தையில் ரொம்பவே அக்ரெஸிவாக இருக்கிறது. எதிர்பார்க்காத விலையில் சூப்பர் எஸ்யுவி கார் ஹாரியரை அறிமுகப்படுத்தி அனைவரையும் அசர வைத்

தது. உடனே 45எக்ஸ் மாடலின் பெயரை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியது. இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் டாடா அல்ட்ரோஸ் உட்பட நான்கு கார்கள் களமிறக்கப்பட இருக்கின்றன. தற்போது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஒரு புதிய எஸ்யுவி காரை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது. அதற்கு இப்போது தற்காலிகமாக ‘பிளாக்பேர்ட்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாக்பேர்ட் எஸ்யுவி நெக்சான் மாடலுக்கும், ஹாரியர் மாடலுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நெக்சான் 4 மீட்டர் நீளமுடையது, ஹாரியர் 4.5 மீட்டர் நீளம் கொண்டது. நெக்சான் விலை ரூ. 6.36-10.80 லட்சம். ஹாரியர் விலை ரூ.12.69-16.25 லட்சம்.

இது இரண்டுக்கும் இடையிலுள்ள இடைவெளியை நிரப்ப இந்த எஸ்யுவியை உருவாக்குகிறது. இது 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நெக்சானின் 1.2 டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் 1.5 டீசல் இன்ஜின் வெர்ஷனும், எலெக்ட்ரிக் வெர்ஷனும் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்த மாடல் எஸ்யுவியைச் சந்தைக்கு கொண்டுவருவதன் மூலம், அனைத்து விதமான எஸ்யுவி மாடல் கார்களையும் வைத்துள்ள நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் மாறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x