Published : 04 Feb 2019 12:13 PM
Last Updated : 04 Feb 2019 12:13 PM

டாடாவின் நான்கு புதிய கார்கள்

ஜெனீவாவில் நடைபெற உள்ள மோட்டார் ஷோவில் டாடா நான்கு புதிய கார்களுக்கான கான்செப்ட்டுகளுடன் அனைவரையும் கவர உள்ளது. ஜெனீவா மோட்டார் ஷோவில் கடந்த 20 ஆண்டுகளாகக் கலந்துகொண்ட டாடா பல்வேறு கார்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது டாடாவுக்கு 21-வது ஜெனீவா மோட்டார் ஷோ. இதில் டாடா விஷன் ஹார்ன்பில் மைக்ரோ எஸ்யுவி, டாடா ஹெச்7எக்ஸ், டாடா 45எக்ஸ் ஹேட்ச்பேக், டாடா 45எக்ஸ் இவி ஆகிய நான்கு புதிய   கார்களை களமிறக்குகிறது.

டாடா விஷன் ஹார்ன்பில் ஆல்பா பிளாட்பார்மில், மஹிந்திரா கேயுவி100 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள மாருதி பியூச்சர் எஸ் மாடல் போன்ற சதுரமான வடிவமைப்பில் உருவாக உள்ளது. 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மைக்ரோ எஸ்யுவிகளுக்கு வரவேற்பு இருப்பதால் அதற்கான சந்தையைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது டாடா. 

டாடா ஹெச்7எக்ஸ் என்பது, 7 இருக்கை கொண்ட ஹாரியரின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த மாடல் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மூன்றாவது வரிசை இருக்கைகளை பொருத்துவதற்கேற்ப, ஸ்டாண்டர்ட் ஹாரியரை விட இது 62 மில்லிமீட்டர் நீளமான பின்பக்க வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இதில் 2.0 கிரையோடெக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உண்டு.

டாடா 45எக்ஸ் ஹேட்ச்பேக் கார், மாருதி பாலெனோ, ஹுண்டாய் ஐ20 ஆகிய கார்களுக்குப் போட்டியாக உருவாக்கப்படுகிறது. இதில் டாடாவின் புதிய இம்பாக்ட் டிசைன் 2.0 பயன்படுத்தப்பட உள்ளது. இதில் பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டி வடிவிலான சென்டர் கன்சோல், பகுதியளவு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டர் ஆகியவை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் டியாகோ, நெக்சான் ஆகிய இரண்டு கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பெட்ரோல் இன்ஜின்கள் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. டாடா 45எக்ஸ்

இவி, இது முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காராக வரவுள்ளது. விரைவில் இதுகுறித்த தகவல்

கள் வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x