இயர்புக் 2019: போட்டித் தேர்வர்களுக்கு வரப்பிரசாதம்

இயர்புக் 2019: போட்டித் தேர்வர்களுக்கு வரப்பிரசாதம்
Updated on
1 min read

‘இந்து தமிழ்’ இயர்புக் 2019, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய குடிமைப் பணித் தேர்வுகள், வங்கிப் பணித் தேர்வுகள், நீட் தேர்வுகள் , இதர பணித் தேர்வுகளுக்காகவும் போட்டித் தேர்வுகளுக்காகவும் பயில்வோருக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழும் நூல்.

தமிழகம், இந்தியா, உலகம் எனப் பல தளங்களில் விரியும் துல்லியமான தகவல்கள் இந்தக் கையேட்டில் பொதிந்துள்ளன. அனைவரது அறிவுத் தாகத்தையும் தணிக்கும் பேரூற்றாக இப்புத்தகம் உள்ளது.

செம்மார்ந்த சிந்தனையாளர்களின் அறிவார்ந்த கட்டுரைகள், விவாதப் பொருளான பல தலைப்புகளில் சார்பற்ற நடுநிலையான அலசல்கள் எனப் பல்வேறு அடுக்குகளில் பரிணமித்துள்ளது இந்நூல். கட்டுப்படியாகும் விலையில் யாவர்க்கும் பயன்தரும் கை அணிகலனைப் போல் இந்த நூல் இருக்கிறது.

எதிர்காலத்தில் வர இருக்கும் ‘இந்து தமிழ் இயர் புக்’ கவனம் செலுத்த வேண்டிய சில பரிந்துரைகளையும் முன்வைக்கிறேன். சிறப்புக் கட்டுரைகள் பயனளிப்பவை என்பதில் சந்தேகமில்லை. சுமார் 25 சிறப்பு கட்டுரைகள் இருக்கின்றன. அவை அதிக பக்கங்களை எடுத்துகொண்டுவிட்டன.

இவற்றுக்கு இணையாகவோ அதிகமாகவோ நடப்பு நிகழ்வுகள் சார்ந்த செய்திகள் இடம்பெற்றிருக்கலாம். நடப்பு நிகழ்வுகள் சார்ந்த எல்லாச் செய்திகளையும் 50-75 வார்த்தைகளில் சுருக்கமாகவாவது கொடுப்பது நல்லது. நடப்பு நிகழ்வுகள் சார்ந்த விரிவான கட்டுரைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். பெரிய கட்டுரைகளை அத்தியாயங்களாகப் பிரித்து, பொருத்தமான துணைத் தலைப்புகளுடன் கொடுத்தால் மாணவர்களுக்கு இன்னும் கூடுதல் பயன்தரும். 

- திலகவதி ஐ.பி.எஸ்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://www.kamadenu.in/publications

SMS வழியே முன்பதிவு செய்ய: Y19 Name Location Pincode ஐ type செய்து 9773001174 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். முன்கூட்டியே பதிவுசெய்தால் தபால் செலவு ரூ.40/- இலவசம் முந்துங்கள் தபால் சலுகை 10-01-2019 வரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in