Published : 01 Sep 2014 02:08 PM
Last Updated : 01 Sep 2014 02:08 PM

பாரத ஸ்டேட் வங்கியில் 2986 காலியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கி, அதன் அஸோஸியேட் வங்கிகளின் புரோபேஷனரி ஆபீஸர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2986 பணியிடங்களுக்குத் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களை இட்டு நிரப்ப பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

மொத்தம் 2986. இதில் எஸ்பிடி- 1136, எஸ்பிஹெச்-900, எஸ்பிஎம்-500, எஸ்பிபிஜே-350, எஸ்பிபி-100.

வயது

2014, செப்டம்பர் 1 அன்று 21-30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1984, செப்டம்பர் 2-லிருந்து 1993 செப்டம்பர் 1-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசின் விதிமுறைப்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100, பிற பிரிவினருக்கு ரூ.500. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனிலோ செலான் மூலமாகவோ கட்டலாம். செலான் மூலம் கட்டினால் விண்ணப்பித்த மூன்று வேலை நாள்களுக்குள் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

உரிய தகுதியுள்ளவர்கள் www.statebankofindia.com என்னும் இணையதளத்தில் அல்லது www.sbi.co.in என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். முறையாக விவரங்களை உள்ளீடு செய்து முடித்த பின்னர் விண்ணப்பத்தைச் சேமித்த பின்னர் தரப்படும் ரெஜிஸ்ட்ரேஷன் எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் குறித்துவைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமெனில் மீண்டும் அதை மேற்கொள்ள இவை பயன்படும். விண்ணப்பத்தைச் சேமித்தவுடன் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பின்னர்தான் விண்ணப்பிக்கும் வழிமுறை நிறைவுபெறும்.

விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பத்தையும் பணம் செலுத்திய ஆன்லைன் ரசீதையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை எஸ்பிஐ இணையதளத்தில் 27.10.2014 முதல் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் அஞ்சல் வழியே அனுப்பப்பட மாட்டாது. எழுத்துத் தேர்வுக்குச் செல்லும்போது ஹால் டிக்கெட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற அடையாள அட்டை ஒன்றையும் கொண்டுசெல்ல வேண்டும். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

முக்கிய நாள்கள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01.09.2014 விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2014 ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நாள்கள்: 01.09.2014 18.09.2014 செலான் மூலம் கட்டணம் செலுத்தும் நாள்கள்: 03.09.2014- 20.09.2014 எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் - 2014 கூடுதல் விவரங்களுக்கு >www.sbi.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x