Published : 12 Feb 2019 11:22 AM
Last Updated : 12 Feb 2019 11:22 AM

இயர்புக் 2019: தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம்

‘இந்து தமிழ் இயர்புக் 2019’ சிறப்பு வாய்ந்த ஒரு புத்தகம். போட்டித் தேர்வுகளை எழுதப்போகும் அனைவருக்குமான கையேடாக இது உருவாகியுள்ளது. வரலாற்று நிகழ்வுகள்,  நிகழ்கால நிகழ்வுகள், மனிதர்கள், பொருட்கள் ஆகியவற்றை உலகம், தேசம், மாநிலம் என வகை பிரித்து விரிவாக அளித்திருப்பது, தமிழில் ஒரு முன்னோடி முயற்சி.

வாசிப்புத்தன்மை, அச்சுத் தரம், தரவுகள், படங்கள் ஆகியவை மூலம் அவசிய வாசிப்பு, தகவல் சரிபார்ப்பதற்கான ஒரு நூலாகவும் இதை மாற்றியுள்ளன. எனவே, இது அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பொது நூலகங்களில் வைக்கப்பட வேண்டிய நூல் என்ற தகுதியைப் பெறுகிறது. ஒவ்வொரு தனிநபரின் நூல் சேகரிப்பில் அவசியம் இடம்பெற வேண்டிய நூலும்கூட.

சிறப்புக் கட்டுரைகளை எழுத அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த தகுதி யான நபர்கள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்த நூலின் இன்னொரு சிறப்பு. மொத்தத்தில் ‘இந்து தமிழ் இயர்புக் 2019’ தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

என் சக ஊழியர்களிடம் இந்த இயர்புக்கைக் காண்பித்து, வரும் ஆண்டுகளில் நாமும் ‘இயர்புக்’ வெளியிட முயல வேண்டும். அதன்மூலம் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் மாநிலம் மேலும் முன்னேற வழிவகுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளேன். இதுபோன்ற ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ‘இந்து தமிழ்’-ன் இயர்புக் உருவாக்கியுள்ளது. இந்த இயர்புக், பாரம்பரியப் புகழ்மிக்க ‘இந்து’க் குழும'த்தின் இன்னுமொரு ஜொலிக்கும் வைரம் என்பதில் சந்தேகமில்லை.

- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் இயக்குநர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x