

நேர மேலாண்மை
ஒரு மதிப்பெண் பகுதிக்கு 15 நிமிடம், இரு மதிப்பெண் பகுதிக்கு 40, ஐந்துமதிப்பெண் பகுதிக்கு 55, பத்து மதிப்பெண் பகுதிக்கு 30 நிமிடங்கள் எனஒதுக்கீடு செய்தால், நிறைவாகத் திருப்புதலுக்கு 10 நிமிடம் கிடைக்கும். தேர்வின் தொடக்கத்தில் வினாத்தாள் வாசிப்புக்காக வழங்கப்படும் 10நிமிடங்களை முறையாகப் பயன்படுத்தினால், மேற்கண்ட நேர மேலாண்மைமுழுமையாகும்.
இதர முக்கியக் குறிப்புகள்
கணக்குகளை உரிய படிநிலைகளுடன் தீர்க்கப் பழக வேண்டும்.கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிய சூத்திரம், அதில் மதிப்புகளைப்பிரதியிடல், கணக்கீடுகளுக்கான படிகளை முறையாகச் செய்தல், விடையைஉரிய அலகுடன் எடுத்து எழுதுதல் ஆகிய படிநிலைகளுக்கானவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முழு மதிப்பெண் பெற உதவும்.
வரையறை தொடர்பான வினாக்களுக்கு விடையளிப்பதில் எச்சரிக்கைஅவசியம். ஒரு வார்த்தை தவறினாலும் மதிப்பெண் இழப்பு ஏற்படும்என்பதால், நன்கு தெரிந்தால் மட்டும் பதிலளியுங்கள். மற்றபடி சாய்ஸில்தவிர்த்து விடலாம்.
முந்தைய வருடங்களின் வினாக்களை வினா வங்கியாகச் சேகரித்துப்படிப்பதிலும் இனிக் கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி கேட்கப்பட்டவை,முக்கிய வினாக்கள் போன்றவை கிட்டத்தட்டப் பாதியாகத் தற்போதுகுறைந்துள்ளன. இதுவரை கேட்கப்படாத (Non-repeated) வினாக்கள் சுமார் 40சதவீதம் வரை இனிக் கேட்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டின் இறுதித்தேர்வு மற்றும் தற்போதைய அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்களின்அடிப்படையில் இந்த முடிவுக்கு வரலாம். எனவே, புத்தகம் முழுக்கப்படிப்பதும், வழக்கமான வினாக்களை வேறு எப்படியெல்லாம் மாற்றிக் கேட்கவாய்ப்புள்ளது என்பதையும் உள்வாங்கிக்கொண்டு படிப்பதும்அவசியமாகின்றன. குறிப்பாக 2 மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் இம்மாதிரிகேட்கப்பட வாய்ப்புள்ளதால் பயிற்சி முழுமைக்கும் கணக்குகளைத் தீர்த்துப்பழகுவது அவசியம்.
ஒரு மதிப்பெண் பகுதியில் வினா எண், ஆப்ஷன், விடை மூன்றும் இருந்தால்மட்டுமே மதிப்பெண் கிடைக்கும். புத்தக வினாவில் விடைகளுக்கானகொள்குறிவகை (Multiple choice) வரிசையானது, வினாத்தாளில் தனதுவரிசையில் மாறி அமையவும் வாய்ப்புள்ளது. எனவே, வினாவுக்கானவிடையினை அடையாளம் காண்பதில் மாணவர்களுக்குக் கூடுதல்எச்சரிக்கை தேவை.