Published : 28 Jan 2019 12:16 PM
Last Updated : 28 Jan 2019 12:16 PM

புதுப்பொலிவுடன் வரும் மாருதி பாலெனோ

மாருதி சுசூகி நிறுவனம் புதிய வேகன் ஆர் மாடலைத் தொடர்ந்து விரைவில் புதிய பாலெனோ ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கெனவே இதுகுறித்த விவரங்கள் பரவலாக வெளியாகி கார் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய பாலெனோ ஃபேஸ்லிப்ட் மாடலை மேலும் அழகாக்கும் வகையில், இதன் முன்பக்க கிரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எல்இடி புரொஜெக்டர் லைட்டுகள், வெர்ட்டிகலாக பொருத்தப்படும் ஃபாக் லைட்டுகள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

உட்புறத்தைப் பொருத்தவரை புதிய பாலெனோவில் வேகன் ஆர் காரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் பொருத்தப்படுகிறது. மேலும் இருக்கைகளின் நிறங்கள், பக்கவாட்டு கதவுகளில் பொருத்தப்பட்டுள்ள பேடுகளின் நிறங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. மேலும் ரியர் பார்க்கிங் சென்ஸார், வேக எச்சரிக்கை, சீட்பெல்ட் எச்சரிக்கை வசதிகளும் இதில் சேர்க்கப்படுகின்றன.

ஆனால், இன்ஜினில் எந்த மாற்றமுமில்லை. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான் தொடர்கின்றன. புதிய பாலெனோ ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மாருதி நெக்ஸா ஷோரூம்களில் இது விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாலெனோ ஃபேஸ்லிப்ட் மாடலைத் தொடர்ந்து பாலெனோ ஆர் எஸ் என்ற மாடலையும் மாருதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மட்டும்தான். ஆனால், இதில் காரின் உட்புறம் முழுவதும் கருப்பு வண்ணத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அலாய் வீல் டிசைனும் இதில் உள்ளதாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x