Published : 21 Jan 2019 12:57 PM
Last Updated : 21 Jan 2019 12:57 PM

டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார்!

டொயோட்டா நிறுவனம் தனது கேம்ரி மாடலில் ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 36.95 லட்சமாகும். இதற்கு முன்பு அறிமுகப்படுத்திய கேம்ரி ஹைபிரிட் மாடல்விலை ரூ. 37.38 லட்சமாக இருந்தது. இந்த மாடல் கார் டொயோட்டா நிறுவனத்தின் புதிய சர்வதேச வடிவமைப்பு திட்டத்தின்படி (டிஎன்ஜிஏ) உருவாக்கப்பட்டது. இதன் வெளிப்புறத் தோற்றம் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக உள்ளது. ஸ்லீக்கான எல்இடி முகப்பு விளக்கு, சற்று உயர்த்தப்பட்ட மேற்கூரை வடிவம் இக்காரின் தோற்றப் பொலிவை மேலும் அழகாக்குகிறது.

இது 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 178 ஹெச்பி மற்றும் 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழு திறனைக் கொண்டது. இதில் 120 ஹெச்பி திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்தக் கார் மொத்தம் வெளிப்படுத்தும் சக்தி 218 ஹெச்பி ஆக உள்ளது. சிவிடி கியர்பாக்ஸ் மூலமாக இதன் சக்தி சக்கரங்களுக்கு நகர்த்தப்படுகிறது. இதன் பின் இருக்கையின் கீழ்ப் பகுதியில் பேட்டரி உள்ளது.

ஹைபிரிட் காராக இருப்பதால் இது சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 23.2 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. இந்தக் காரில் மூன்று பகுதிகளில் ஏசி அளவை கட்டுப்படுத்த முடியும். 8 அங்குலதொடு திரை மிகச் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்கிறது. பின்னிருக்கையை சாய்த்துக் கொள்ள வசதி, முன் இருக்கைகள் மின்சாரத்தில் செயல்படுபவை.

பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்த மட்டில் 9 ஏர் பேக்குகளுடன் இது வந்துள்ளது. இது தவிர ஏபிஎஸ், இபிடி, டிராக்ஷன், ஸ்டெபிலிடி கண்ட்ரோல், குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை ஆகியன உள்ளன.

ஹோண்டா அக்கார்டு காருக்கு போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல ஃபோக்ஸ்வேகனின் பசாட் மற்றும் ஸ்கோடா சூபர்ப் ஆகிய மாடலுக்கும் இது கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x