இயர்புக் 2019: அவசியமான ஒரு புத்தகம்

இயர்புக் 2019: அவசியமான ஒரு புத்தகம்
Updated on
1 min read

கற்கால மனிதன் நாகரிக மனிதனாக மாறியதில் அறிவு வளர்ச்சியின் பங்கு மிக முக்கியமானது. உலக அறிவை வளர்த்துக்கொள்வதே நம்மை மென்மேலும் நாகரிகமாகவும்  உலகைப் புரிந்துகொண்ட மனிதராகவும் மாற்றக்கூடியது. எனவே, ஒவ்வொரு மனிதனும் கடந்த கால வரலாற்றையும் நாம் வாழும் பூமியின் அமைப்பையும்  நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் உண்மையான கல்விபெற்ற மனிதனாக மாற ‘இந்து தமிழ் இயர்புக் 2019’ நிச்சயம் உதவும். ‘இந்து தமிழ்’ நாளிதழ் முதன்முறையாக வெளியிட்டிருக்கும் இந்த நூல், இயர் புக்குக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்கள், நிகழ்வுகள், அறிவியல் கோட்பாடுகள்  மட்டுமல்லாமல், பயனுள்ள பல சிறப்புக் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புத்தகம் தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வுகளிலும் காவல்துறைப் பணியாளர் தேர்வுகளிலும் வெற்றி பெற உதவியாக இருக்கும். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பெற்றோர் பிள்ளைகளுக்கு அள்ளித் தர வேண்டிய செல்வம் அறிவு சார்ந்த தகவல்கள்தாம். பள்ளி மாணவர்கள் இந்த நூலை விடுமுறை நாட்களில் படித்துப் பயனடையலாம். ஒவ்வொரு வீட்டுப் புத்தக அலமாரியிலும் இருக்க வேண்டிய நூல் இது. இந்த நூலைப் பெரியவர்கள் தவறாமல் படிக்க வேண்டும். பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும்.

வாருங்கள், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

- செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., கூடுதல் டிஜிபி

ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://www.kamadenu.in/publications

SMS வழியே முன்பதிவு செய்ய: Y19 Name Location Pincode ஐ type செய்து 9773001174 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். முன்கூட்டியே பதிவுசெய்தால் தபால் செலவு ரூ.40/- இலவசம் முந்துங்கள் தபால் சலுகை 10-01-2019 வரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in