

அமெரிக்கா நிலவை நோக்கி அனுப்பிய அப்பல்லோ 17 எனும் விண்கலத்தின் ஆய்வாளர்கள் பயணத்தின் நடுவில் 1972 டிசம்பர் 7-ந்தேதி ஏறத்தாழ பூமியில் இருந்து 45 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இந்தப் புகைப்படத்தை எடுத்தனர். அங்கிருந்து பார்க்கும் போது கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு நீலநிற மார்பிள் போல வண்ணமயமாக காட்சியளித்தது. அதனால் அப்படத்துக்கு ப்ளூ மார்பிள் என பெயரிட்டனர். இதை எடுக்கும்போது விண்கலத்துக்கு பின்புறத்தில் சூரியன் இருந்தது. பூமியை இவ்வளவு முழுமையான முறையில் எடுக்கப்பட்ட அரிய படங்களில் இதுவும் ஒன்று.