Published : 19 Dec 2018 09:58 AM
Last Updated : 19 Dec 2018 09:58 AM
கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. உலகின் மிகச் சிறிய நாடு.
2. தூய பீட்டரின் கல்லறை இங்கு உள்ளது.
3. இந்த நாட்டுக்கு ராணுவம் கிடையாது. பிற நாடுகளுடன் வணிகமும் கிடையாது.
4. 11 பிப்ரவரி 1929-ம் ஆண்டு இத்தாலியிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
5. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை இடமாக இருக்கிறது.
5. போப்பாண்டவர் இந்த நாட்டின் தலைவர்.
6. சுவிட்சர்லாந்து நாட்டுக் காவலர்கள் இந்த நாட்டைப் பாதுகாக்கிறார்கள். இங்கே சிறைச்சாலை கிடையாது.
7. பசுமை நிறைந்த நாடு. மூன்றில் ஒரு பங்கு தோட்டங்களைக் கொண்டது.
8. இது ஐ.நா.சபையில் உறுப்பினர் இல்லை. ஆனால் நிரந்தரப் பார்வையாளர் என்ற அந்தஸ்து உண்டு.
9. அதிகமான மக்கள் வரக்கூடிய நாடுகளில் இதுவும் ஒன்று.
10. சுற்றுலா மூலமும் பதக்கங்கள், பரிசுகளின் விற்பனை மூலமும் வருமானம் கிடைக்கிறது.
விடை: வாடிகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT