Published : 11 Nov 2018 10:27 AM
Last Updated : 11 Nov 2018 10:27 AM

குறிப்புகள் பலவிதம்: மிருதுவான சருமம் பெற

> தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றைக் கலந்து, அந்தக் கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவுங்கள் வறண்ட சருமம் மிருதுவாகும்.

> தக்காளிப் பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

> ஆப்பிள் பழத்தைச் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

> பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து  முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.

> எலுமிச்சைச் சாற்றை ஒரு பஞ்சு உருண்டையில் தொட்டு  முகத்திலும் கழுத்திலும் பரவலாகத் தடவ வேண்டும். இந்த எளிய முறை சருமத்தின் எண்ணெய்ப் பசையைப் போக்கி சிறந்த மாற்றத்தை உடனே கொடுக்கும்.

> உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

> உங்களால் முடிந்தவரை உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.  பழங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும், தண்ணீரை அதிகமாகக் குடிக்க வேண்டும், ரோஸ் வாட்டரை சருமத்தில் பூசலாம்.

- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x