

தமிழக அரசின் இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 65 காலியிடங்களும் செயல் அலுவலர் (கிரேடு-3 ) பதவியில் 55 காலியிடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
தேவையான தகுதி
கிரேடு-4 பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களும் கிரேடு-3 பதவிக்கு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். செயல் அலுவலர் கிரேடு-4 பதவிக்கு வயது குறைந்தபட்சம் 25 அதிகபட்சம் 35.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பு 40 ஆகவும் பி.சி., எம்.பி.சி. வகுப்பினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சக் கல்வித் தகுதியைக்
(எஸ்.எஸ்.எல்.சி.) காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி (பிளஸ் 2, பட்டப் படிப்பு போன்றவை) பெற்றிருந்தால் அவர்களுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.
செயல் அலுவலர் கிரேடு-3 பதவியைப் பொறுத்தவரையில், வயது குறைந்தபட்சம் 25 ஆகவும் அதிகபட்சம் 35 வரையிலும் இருக்கலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.) வயது வரம்பு கிடையாது.
தேர்வு முறை
இரண்டு பணிகளுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் இரு தாள்கள் இருக்கும். முதல் தாளான பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 200 கேள்விகளும் 2-வது தாளான இந்து மதம் மற்றும் சைவமும், வைணவமும் பகுதியில் 200 வினாக்களும் இடம்பெறும்.
தகுதியுடைய தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி இரண்டு தேர்வுகளுக்கும் தனித்தனியே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுமுறை, தேர்வு மையங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
முக்கிய தேதி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3 டிசம்பர் 2018
கிரேடு-3 பதவிக்கு எழுத்துத் தேர்வு: 16 பிப்ரவரி 2019
கிரேடு-4 பதவிக்கு எழுத்துத் தேர்வு: 17 பிப்ரவரி 2019வேலை வேண்டுமா?