

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறு வனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழ கத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் கடந்த 2013 டிசம்பரில் நடத்திய எம்.பி.ஏ. தேர்வுக்கான முடிவுகள் வரும் 17-ம் தேதி வெளியிடப்படுகிறது.
www.iedunom.ac.in, www.unom.ac.in, www.southindia.com, www.webdunia.com, www.chennaionline.com, www.kalvimalar.com, www.indiaresults.com, www.schools9.com, www.examresults.net ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணிக்குப் பிறகு தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வுத்தாள் ஒவ்வொன் றுக்கும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணம் ரூ.750. மறுமதிப் பீடு விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.iedunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள் ளலாம். தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் தகவல் மையத் திலும் பெறலாம். மறுமதிப் பீட்டுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 25-ம் தேதி கடைசி நாள்.