Last Updated : 27 Nov, 2018 10:08 AM

 

Published : 27 Nov 2018 10:08 AM
Last Updated : 27 Nov 2018 10:08 AM

ஆங்கில​ம் அறிவோமே 241: போகத்தான் வேண்டுமா?

கேட்டாரே ஒரு கேள்வி

“You’re going.  You’re going?  You’re going!  -  இப்படி மூன்று விதமாக எழுதும்போது அவை என்னென்ன மாறுபட்ட பொருள்களைக் கொடுக்கின்றன?” 

கேள்விக்குறியில் முடிவதென்றால் Are you going? என்றல்லவா அந்த வாக்கியம் இருக்க வேண்டும்?  என்றாலும் நடைமுறையில் பலரும் மேலே உள்ளபடி மூன்று விதங்களிலும் எழுதுவதால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைப் பார்க்கலாம்.

You’re going என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது நீ போய்க்கொண்டிருக்கிறாய் என்று அர்த்தமாகிறது.  ஆனால், ஒரு சிறுவனைப் பார்த்து அவன் தாய் ‘You have only slight fever.  You cannot absent from school.  You’re going’ என்று சொல்லும்போது நீ போகத்தான் வேண்டும் என்று அர்த்தமாகிறது. 

You’re going?  இந்த வாக்கியத்துக்கு இதுதான் பொருள்.  “அதற்குள்ளாகவா போகிறேன் என்கிறாய்?  இப்போதுதானே வந்தாய்!”

You’re going! என்றால் ‘உனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீ போய்த்தான் ஆக வேண்டும்’ என்று அர்த்தம்.

Moron என்பது யாரைக் குறிக்கும்?

இந்தச் சொல்லை உருவாக்கியவர் மனநல நிபுணரான ஹென்றி கோடார்ட்.  மருத்துவ உலகைப் பொறுத்தவரை மெரோன் என்பவர் வயதான பின்பும் ஒரு குழந்தைக்கே உரிய (சுமார் 10 வயதுக் குழந்தை) மனவளர்ச்சி கொண்டவர். 

மெரோன் என்று இதை உச்சரிக்க வேண்டும்.  கிரேக்க மொழியில் மெரோன் என்றால் முட்டள்தனமான என்று பொருள். எனவே, முட்டாள் என்பதைக் குறிக்க moron என்ற சொல்லை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

english-2jpg100 

நான் மிகவும் வெளிப்படையானவன் என்றால் straightforward person என்று சொல்லலாமா?

நடைமுறையில் அப்படி ஏற்கப்படுகிறது.  ஆனால், straightforward statement என்றால் அது எளிமையானது.  எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது என்றுதான் அர்த்தம். 

அதேபோல ஒருவர் open minded ஆக இருக்கிறார் என்றால் அவர் எல்லாவற்றையும் மனம் திறந்து கொட்டுகிறார் என்பதல்ல.  எதிர்க் கருத்து சரி என்று பட்டால் அதை ஏற்கும் மனப்பக்குவம் கொண்டவராக இருக்கிறார் என்றுதான் பொருள்.

*************

போட்டியில் கேட்டுவிட்டால்?

I decided to sell my land when I was offered a more _____________ price.

a) Truthful

b) Exact

c) Fashion

d) Realistic

e) Stronger

ஒரு குறிப்பிட்ட விலை அளிக்கப்பட்டதும் நான் என் நிலத்தை விற்கத் தீர்மானித்தேன் என்பதைத்தான் வாக்கியம் குறிக்கிறது. 

Truthful price என்பது சரியான பயன்பாடு அல்ல.  Stronger price என்பதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.  Fashion price என்று ஒன்று இருக்க முடியாது.  (ஒரு பேச்சுக்காக Fashionable price என்று இருக்கலாம்).

Exact price, realistic price ஆகியவை சரியான பயன்பாடுகள்தாம்.  ஆனால், கோடிட்ட இடத்துக்கு முன்பு more என்ற சொல் இருக்கிறது.  Exact என்பது துல்லியமான ஒன்றைத்தான் குறிக்கிறது.  அதைவிட துல்லியமாகவோ சரியாகவே ஒன்று இருக்க முடியாது.  எனவே, more exact என்பது வராது.

ஆக more realistic என்பதுதான் பொருத்தமான சொற்கள்.  எனவே, வாக்கியம் I decided to sell my land when I was offered a more realistic price என்பதாக இருக்க வேண்டும்.

சிப்ஸ்

# Hoax என்றால் ஏமாற்றுதலா?

தந்திரம் கலந்து ஏமாற்றுதல்.   ஏப்ரல் ஃபூல் செய்வதை hoax எனலாம்.

# Salient features என்றால்?

முக்கியமான தன்மைகள்.  அதாவது பளிச்சென்று புலப்படுவதை salient என்பார்கள் -  prominent.

# சொர்க்கம் போன்ற ஓர் இடத்தைக் குறிக்க Utopia என்போம். நரகம் போன்ற ஓர் இடத்தைக் குறிக்க ஏதாவது சொல் உண்டா?

Dystopia

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x