Last Updated : 13 Nov, 2018 10:56 AM

 

Published : 13 Nov 2018 10:56 AM
Last Updated : 13 Nov 2018 10:56 AM

ஆங்கில​ம் அறிவோமே 239: தலைக்கனம் இருந்தால் சான்ஸே இல்லை!

கேட்டாரே ஒரு கேள்வி

“Aussie என்பது ஒரு நபரைக் குறிக்கிறதா அல்லது நாட்டைக் குறிக்கிறதா?

“He is fat என்றாலும், he is corpulent என்றாலும் ஒரே பொருள்தானா?

ஆமாம்.  லத்தீன் மொழியில் corpus என்றால் உடல் என்று பொருள்.

Rotund என்ற வார்த்தையையும் குண்டாக என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள்.  செல்லமாகவும், குண்டாக இருப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போலவும்  chubby, tubby போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இதையும் ஒருபடி தாண்டி, பருமனாக இருப்பதுதான் வரம் என்பதுபோல் comfortable, well built போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள்.  Plump என்ற வார்த்தைகூட ‘முழுமையான உருவத்தைக்’ குறிக்கிறது.

 

Corporation என்றால் மாநகராட்சி என்றுதான் நாம் நினைத்துக்கொள்வோம்.  சில நிறுவனங்களின் பெயரின் இறுதியில் corporation  என்ற வார்த்தை ஒட்டிக் கொண்டிருக்கும்.

ஆனால், பிரிட்டிஷ் ஆங்கி லத்தில் தொப்பையைக் குறிக்கவும் corporation என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது.  18-ம் நூற்றாண்டிலிருந்தே இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.  அந்தக் காலத்தில் மேயர்கள் அடிக்கடி விருந்துகளில் கலந்துகொள்வார்கள்.  தவிரத் தாங்களாகவே வேறு அடிக்கடி விருந்துகளை ஏற்பாடு செய்வார்கள்.  இதன் காரணமாக அவர்களில் பலருக்கும் பெரும் தொப்பை உருவாகி இருந்தது.  எனவே, பெரும் தொப்பையையும், அதைக் கொண்டவர்களையும் அப்படிப்பட்டவர்களையும்  கிண்டலாக ‘Corporation’  என்று குறிப்பிடத் தொடங்கினார்கள்.

 

Aussie என்பது நாடு, நபர் ஆகிய இரண்டில் எதையும் குறிக்கலாம். 

“I will be in Aussie” என்றும் கூறுகிறார்கள்.  "He is an Aussie.  No doubt he plays cricket" "என்றும் கூறுகிறார்கள்.  "He married an Aussie girl என்பதும் சகஜமாகிவிட்டது (அதாவது இப்படிக் கூறுவது!).

ஆஸ்திரேலியர்களின் சராசரி ஆயுள் அதிகமாகிக்கொண்டு வருகிறது.  என்றாலும் அவர்களின் எடையும் அதிகமாகி வருகிறது.  70 சதவீதம் ஆஸ்திரேலியர்கள் அதிக எடையுடன் (over weight) இருப்பதாக அந்த நாட்டின் தேசிய உடல்நல அறிக்கை கூறுகிறது.

 

Fat head உள்ளவர்களுக்கு Fat chance உருவாகுமா என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

வாசகர் கூறுவதன் பொருள் புரியவில்லை.  ஆனால், இந்த இரண்டிற்குமான பொருளை அறிந்து கொள்வோம். 

Fat head என்றால் தலைக்கனம்.  A narrow mind and a fat head invariably come on the same person.

Fat chance? (கிட்டத்தட்ட) சான்ஸே இல்லை.  ‘’We have been invited for the function.  They will invite you also” என்று ஒருவர் கூறும்போது ‘’Fat chance” என்று நீங்கள் கூறினால் அவர்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்க மாட்டார்கள் என்று நீங்கள் கருதுவதாகப் பொருள்.  

தொடக்கம் இப்படித்தான்

Weight-watchers என்பது 1960-ல் அமெரிக்காவில் புதிதாகத் தொடங்கிய ஒரு வார்த்தை.  இது காப்புரிமை பெறப்பட்ட ஒரு பெயர்.  உடல் இளைப்பதற்காக வழி செய்யும் ஒரு நிறுவனம் தனக்கு இப்படி ஒரு பெயரைச் சூடிக் கொண்டது.

அடிக்கடி தன் எடை என்ன என்பதை watch செய்பவர் மட்டுமே weight watcher ஆகிவிட முடியாது.  எடையைக் குறைக்கவோ அல்லது அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவோ முயற்சிகளை எடுப்பவர்தான் weight-watcher.

(தொடர்புக்கு:

aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x