Last Updated : 18 Aug, 2014 10:00 AM

 

Published : 18 Aug 2014 10:00 AM
Last Updated : 18 Aug 2014 10:00 AM

கல்விச் சுடரைத் தூண்டும் கோல்

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் உயர உதவுவது கல்வி மட்டுமே. தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 20 சதவீதத்தினராக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுடைய குழந்தைகளுக்கெனத் தமிழக அரசுத் துறையின் கீழ் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இவை தொடங்கப்பட்ட நோக்கம் நிறைவேறும் வகையில் இவை செயல்படுகின்றவா என்பது குறித்து அறிய ஓர் ஆய்வு தேவைப்பட்டது. எனவே தமிழ்நாடு சமக கல்வி இயக்கம் சார்பில், வடதமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளின் உண்மை நிலவரம் குறித்துக் கண்டறிவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்காக ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 90 ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் மாதிரியாகக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு 2013 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை நடத்தப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட தமிழ்நாடு சக கல்வி இயக்கம் அதன் சுருக்கத்தை ஒரு சிறு நூலாகவும் வெளியிட்டுள்ளது. இந்த இயக்கத்தைச் சேர்ந்த மாநில அட்வகசி ஒருங்கிணைப்பாளர் அம்புரோஸ் ஆய்வின் தகவல்கள் அடிப்படையில் இதை நூலாக மாற்றியுள்ளார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பழங்குடியினருக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட உரிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களைப் பொது நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் அமையப்பெற்ற கல்வியை அவர்களுக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இதன் மதிப்புரையில் இரா.கிருத்துதாசு காந்தி.

ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளின் தற்போதைய நிலையை விவரித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

வடதமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் உண்மை நிலை: ஆய்வுச் சுருக்கம்
சமகல்வி இயக்கம்- தமிழ்நாடு
சேத்துப்பட்டு, சென்னை-31
தொலைபேசி: 044- 43586314

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x