Published : 01 Oct 2018 11:12 AM
Last Updated : 01 Oct 2018 11:12 AM

மும்பை நிறுவனம் உருவாக்கிய ஹைபர் கார்

மும்பையைச் சேர்ந்த வாஸிரானி ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ஹைபர் காரை வடிவமைத்துள்ளது. இந்தியாவில் இத்தகைய கார் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த வாரம் இந்த கார் இந்நிறுவனத்தின் ஸ்டூடியோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலானவர்களை இந்த கார் கவர்ந்ததில் வியப்பில்லை. இதன் வடிவமைப்பு, தோற்றம் அனைத்துமே வித்தியாசமாக இருந்தது முக்கியக் காரணமாகும்.

ஷுல் ஹைபர் கார் என பெயரிடப்பட்டுள்ள இந்த காரில் பேட்டரி பேக் ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனித்தனியாக செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த காரை வடிவமைத்த இதன் தலைமை வடிவமைப்பாளர் சுன்கி வாஸிராணி கூறியதாவது: இந்த காருக்கென பிரத்யேகமான பவர் டிரைனை உருவாக்க முடிவு செய்தோம்.

அதற்கென பிரத்யேக டிசைனை உருவாக்கினோம். இந்த வடிவமைப்பு உருவாக்குவதற்கு முக்கிய காரணமே கிராண் டுரிஸ்மோ வீடியோ கேம் உருவாக்கிய காஸுநோரி யமாகுச்சிதான். இதனாலே கிராண் டுரிஸ்மோ லோகோ இதில் எடுப்பாக தெரியும்படி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால வடிவமைப்பான ஷுல் கார் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பான தோற்றத்துடன், அழகிய வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டதை புரிந்து கொள்ள முடியும். வீடியோ கேமில் உள்ளதைப் போன்றே மையப் பகுதியில் எக்ஸாஸ்ட் இருக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்

பட்டுள்ளது. இந்த காரில் காற்று புகும் வகையில் ஏர் டக்ட் அதிகம் உள்ளன. இதன்

மூலம் இந்த காரில் அதிக வேகத்தில் செல்லும்போது பேட்டரி, மோட்டார் சூடாவதைத் தடுக்க உதவும். மேலும் குளிர்விக்க உதவும் ரேடியேட்டர் காரின் மையப் பகுதி வழியாக செல்கிறது. முன்

புறம் உள்ள பம்பரில் உள்ள துளைகள் வாயி

லாக அதிக அளவிலான காற்று பேட்டரி பகுதிக்கு வரும். முகப்பு விளக்குக்கு கீழ் பகுதியில் ஏர் டக்ட் உள்ளது. இது டயர் பிரேக்கை குளிர்விக்க உதவுகிறது.

பின்பகுதியில் ஒருங்கிணைந்த ஸ்பாயிலர் உள்ளது. இது ஃபார்முலா 1 காரில் உள்ளதைப் போன்று அமைந்துள்ளது. இரண்டு இறக்கை போன்ற பகுதிகள் உள்ளது. இது காற்றை ஒரு முகப்படுத்தவும், ஸ்பாயிலராகவும் பயன்படுகிறது. இதில் கேமிராவும் உள்ளது. ரியர் விங் கண்ணாடிக்குப் பதிலாக இந்த கேமிரா செயல்படுகிறது. இதுபோன்ற வசதி ஆடி இ-ட்ரோன் எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறு சிறு பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேட்டரியின் எடை மட்டுமே 300 கிலோவாகும். வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பதற்காக சிறிய அளவிலான பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 100 கி.மீ. வேகத்தை 2.5 விநாடிகளில் இந்த காரினால் எட்ட முடியும். இருப்பினும் 150 கி.மீ. முதல் 200 கி.மீ. வரை வேகத்தில் பயணிக்கச் செய்வதே இந்நிறுவனத்தின் இலக்கு என்கிறார் வாஸ்ராணி.

இந்த கார் 2021-ல் விற்பனைக்கு வர உள்ளது. இது தவிர பிற மாடல்களை உருவாக்கும் முயற்சியிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபட உள்ளது. இருப்பினும் நிறுவனத்திலிருந்து முதலில் வெளிவரும் மாடல் ஷுல் ஆக இருக்கும் என்று உறுதிபட தெரிவிக்கிறார் வாஸ்ராணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x