Published : 30 Oct 2018 02:58 PM
Last Updated : 30 Oct 2018 02:58 PM

வேலை வேண்டுமா? - தமிழக வனத்துறையில் 1178 பணிகள்

தமிழக வனத்துறையில் வன அலுவலர் பதவிக்கான 300 காலிப் பணியிடங்களையும் வனப் பாதுகாவலர் பதவிக்கான 726 காலிப் பணியிடங்களையும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனப் பாதுகாவலர் பதவிக்கான 152 காலிப்பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

வயது: 01.07.2018 அன்று, எஸ்.சி. எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., பி.சி, எம்.பி.சி., சீர்மரபினர், பி.சி. முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கும் கைம்பெண்களுக்கும் குறைந்தபட்ச வயது 21. உச்சபட்ச வயது வரம்பு 35. பிற பிரிவினருக்குக் குறைந்தபட்ச வயது 21. உச்சபட்ச வயது 30. வனப் பாதுகாவலர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனப்பாதுகாவல் ஆகிய பணிகளுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30.

கல்வி: வன அலுவலர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அறிவியல் பாடத்திலோ பொறியியல் படிப்பிலோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். வனப் பாதுகாவலர் பதவிக்குப் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய பதவிக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: வன அலுவலர் பதவிக்கு ரூ.250, பிற பதவிகளுக்கு ரூ.150. கட்டணத்தை ஆன்லைனிலோ இந்தியன் வங்கி சலான் மூலமாகவோ கட்டலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் போன்றவற்றின் மூலம் உரிய விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் www.forests.tn.gov.in என்னும் இணையதளத்தில் நவம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு:

www.forests.tn.gov.in

முக்கிய நாட்கள்

இறுதி நாள்:

விண்ணப்பிக்க 05.11.2018 மாலை 5:00 மணி

வங்கிக் கட்டணம் செலுத்த: 07.11.2018 மதியம் 2 மணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x