Published : 20 Aug 2018 11:19 AM
Last Updated : 20 Aug 2018 11:19 AM

வெற்றி மொழி: சாமுவேல் பட்லர்

1835ம் ஆண்டு முதல் 1902-ம் ஆண்டு வரை வாழ்ந்த சாமுவேல் பட்லர் ஆங்கிலேய கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர். கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள் மற்றும் நாவல்கள் என பல்வேறு வடிவங்களிலும் தனது படைப்புகளைக் கொடுத்துள்ளார். இவை நவீன படைப்புகளில் செல்வாக்கு செலுத்துபவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 1903-ம் ஆண்டு வெளியான இவரது சுயசரிதை நாவலானது, அவரின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியின் மிகச்சிறந்த ஆங்கில எழுத்தாளர் என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவால் பாராட்டப்பட்டவர்.

 

# பெருமை, மாயை மற்றும் அகந்தை ஆகியவையே அறியாமையின் உண்மையான கதாபாத்திரங்கள்.

# செய்வதை உண்மையாக அனுபவித்து செய்யும்போது மக்கள் எப்போதும் நல்ல சகவாசத்துடன் இருக்கிறார்கள்.

# காலை பனி அல்லது மின்னலின் ஒரு ஃபிளாஷ் போன்று நிலையற்றது மனிதனின் வாழ்க்கை.

# நமது தோற்றத்தை மட்டுமே வெளிப்படுத்தும் கண்ணாடிக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

# வாழ்க்கையை யார் அதிகம் அனுபவித்துள்ளாரோ அவரே தனது வாழ்க்கையை சிறப்பாக செலவிட்டவர்.

# வார்த்தைகள் பணம் போன்றவை; உண்மையான பயன்பாட்டில் இல்லாதபட்சத்தில், மிகவும் பயனற்றது.

# பற்றாக்குறையான இடங்களில் இருந்து போதுமான முடிவுகளை எடுப்பதற்கான கலையே வாழ்க்கை.

# வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று அதை அனுபவிக்க வேண்டும் என்பதை பெரும்பாலான மக்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை.

# எல்லா நேரங்களிலும் அனைத்து உண்மையும் சொல்லப்பட வேண்டியதில்லை.

# நட்பு என்பது பணத்தைப் போன்றது, வைத்திருப்பதை விட சம்பாதிப்பது எளிது.

# ஒவ்வொரு மனிதனின் செயலே எப்போதும் அவனுக்கான உருவப்படம்.

# பணம் வேண்டும் என்பது அனைத்து தீமைகளுக்குமான வேர் போன்றது.

# சுய பாதுகாப்பு என்பதே இயற்கையின் முதல் சட்டமாகும்.

# சோர்வடையச் செய்யும் நீண்டதொரு செயல்முறையே வாழ்க்கை.

# வாழ்க்கை என்பது துல்லியமான அறிவியல் அல்ல, அது ஒரு கலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x