Last Updated : 15 Aug, 2018 09:20 AM

 

Published : 15 Aug 2018 09:20 AM
Last Updated : 15 Aug 2018 09:20 AM

இது எந்த நாடு? 74: ஹீரோ சிட்டி!

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்.

1. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு. சோவியத் ரஷ்யாவின் பிடியில் நீண்டகாலம் இருந்தது.

2. இந்த நாட்டின் தலைநகர் மின்ஸ்க். வரலாற்றில் இதுவரை 18 தடவை அழிந்து, மீண்டும் உயிர்த்தெழுந்த நகரம். அதனால் இந்த நகரத்தை ‘ஹீரோ சிட்டி’ என்று அழைக்கிறார்கள்.

3. இரண்டாம் உலகப் போரில் தனது மூன்றில் ஒரு பங்கு மக்களை இழந்த நாடு.

4. 1991, ஆகஸ்ட் 25 அன்று ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

5. 1994 முதல் இன்றுவரை அலெக்சாண்டர் லுகாசென்கோ,  இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கிறார்.

6. ஐரோப்பிய எருது இந்த நாட்டில்தான் அதிகம். இதுவே இந்த நாட்டின் தேசிய விலங்கு.

7. ஐஸ் ஹாக்கி, சைக்கிள் முக்கியமான விளையாட்டுகள்.

8. இந்த நாட்டை சேர்ந்த சிவெத்லானா அலெக்சியேவிச் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர்

9. மே 9 தேசிய விடுமுறை. இரண்டாம் உலகப் போரில்  ஜெர்மானிய ராணுவம் இந்த நாட்டிலிருந்து பின்வாங்கிய தினம்.

10. உருளைக் கிழங்கு அதிகம் விளைவிக்கப்படுகிறது. சுமார் 300 வகையான உருளைக் கிழங்கு உணவு வகைகள் இங்கே பிரபலமானவை.

விடை: பெலாரஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x