

சிறு விவசாயிகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை சுமார் 27 ஆண்டுகளாக விவசாயம், தோட்டக்கலைத் துறைகளில் பலருக்கும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் ஆர்.சதீஷ். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகளிலும் இவரது ஆலோசனையின் கீழ் பராமரிக்கப்படும் வேளாண் பண்ணைகள் இருக்கின்றன. பாரம்பரிய விவசாய அறிவுடன் உலகளாவிய அதிநவீன உயரிய தொழில்நுட்பங்களை இணைத்து, ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைகளை அமைப்பது இவரது தனிச்சிறப்பாகும்.
முதுகலை வேளாண் பட்டதாரியான இவர், பல்வேறு நாடுகளின் முன்னோடி வேளாண் பண்ணைகளுக்கு சென்று வந்த அனுபவம் கொண்டவர். ஏராளமான பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்று சர்வதேச விவசாய விஞ்ஞானிகளுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றவர்.