

அய்யம்பாளையம் நாட்டு ரக நெட்டை தென்னங்கன்றுகளை உருவாக்கி, அதைப் பிற விவசாயிகளுக்கு வழங்கி, இந்தப் பாரம்பரிய தென்னை ரகத்தை அழியாமல் பாதுகாத்து வருகிறார் விவசாயி ரசூல் முகைதீன். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ் மலையடிவாரப் பகுதியில் பாரம்பரிய நாட்டு ரக நெட்டை தென்னை மரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
குறிப்பாக, மருதா நதி அணையை நீர் ஆதாரமாகக் கொண்ட அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, ஆத்தூர், பட்டிவீரன்பட்டி, கோம்பை, தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த நெட்டை தென்னை ரகங்கள் அதிகம் உள்ளன.