

‘மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்சன்’, ‘லீகல் டிரான்ஸ்பிரிப்ஷன்’ என்பதெல்லாம் எனக்கு சற்று அச்சமாகத்தான் இருக்கிறது. ஆனால், வேறு ஏதேனும் தட்டச்சு செய்யும் வேலை இருந்தால் சொல்லுங்கள். செய்து விடுவேன் என்பவர்களுக்காக, இணையம் வழியாக வீட்டிலிருந்தே செய்யக் கூடிய வேறு சில வேலைகளும் இருக்கின்றன.
கையால் எழுதப்பட்டவை அல்லது ஏற்கெனவே வேறு ஏதோ புத்தகத்திலோ, தகவல் அறிக்கையிலோ இருப்பவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து, புதிதாக தட்டச்சு செய்ய (ஜாப் டைப்பிங்) வேண்டும், ஒரு கோப்பு உருவாக்க வேண்டும் என்ற தேவை உள்ளவர்கள் இருக்கிறார்கள். சில நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) கடைகளில் தட்டச்சு செய்து கொடுப்பதற்கு ஆட்கள் உண்டு. பல இடங்களிலும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யக் கூடியவர்கள் இருப்பார்கள். தமிழில் தட்டச்சு செய்யக் கூடியவர்கள் கொஞ்சம் குறைவுதான். எல்லாக் கடைகளிலும் இருக்க மாட்டார்கள்.