

நடிகைகள் கஜோல், டிவிங்கிள் இருவரும் இணைந்து நடத்தும் ‘டூ மச்’ என்கிற நிகழ்ச்சியில், “திருமணத்துக்குக் காலாவதி தேதி வேண்டுமா?” என டிவிங்கிள் கேட்டார். அதற்கு கஜோல், “ஆமாம். திருமணம் காலாவதியாகும் தேதியும் வேண்டும், திருமணத்தை நீட்டிப்பதற்கான வாய்ப்பும் இருக்க வேண்டும்” என்றார். “நாம் சரியான நேரத்தில் சரியான நபரைத்தான் மணந்திருக்கிறோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நன்றாக இருந்தால் திருமணத்தை நீட்டித்துக்கொண்டு தொடரலாம். இல்லையென்றால் காலாவதி தேதி வந்ததும் விலகலாம். யாரும் நீண்ட காலத்துக்குத் துயரப்படத் தேவையில்லை” என்று கஜோல் விளக்கம் தர, அது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.