

நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவைதான் இது. ‘எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துக்கு வான்’ என ஒரு கதாபாத்திரம் அடிக்கடி சொல்லும்போது, மேலே ஒளிந்திருக் கும் கவுண்டமணி கோபப் பட்டு, ‘எல்லாத்தையும் மேலே இருக்குறவன் பார்த்துக்குவான்னா...?’ எனக் கத்திவிடுவார். அதுபோல இத்தொடரைப் படித்தால், டோப மினும் ‘ஏன் எல்லாவற்றுக்கும் என்னையே குறைசொல்கிறீர்கள்?’ எனக் கோபப்படக்கூடும்.
நமக்கு வேறு வழியில்லை. டோபமின் மீது பழிபோடுவதைத் தொடர்வோம். சென்ற அத்தியாயத்தில் ‘டோபமின் நல்லவரா கெட்டவரா?’ எனக் கேட்டிருந்தோம். இக்கேள்விக்குப் பதிலளிக்க நமது கவனத்தைக் கொஞ்சம், ‘கவனம்' பக்கமே திருப்புவோம். கவனிக்கும் திறனில் இரண்டு முக்கியப் பண்புகள் உள்ளன என்று பார்த்தோமல்லவா? ஒன்று, தொடர்ச்சியாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது (concentration), இன்னொன்று புதிதாகச் சூழலில் ஏற்படும் மாறுதலைக் கவனிக்கத் திசைதிருப்புவது (distraction). இரண்டுமே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல நமக்குத் தேவை. எப்படி?