

ஆணிக்கால் என்பது என்ன? அதை ஒரு நிமிடத்தில் எடுப்பதாக நாட்டு மருத்துவத்தில் சொல்கிறார்களே, இது சரி வருமா?
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
நண்பர்களுக்குக் கோபம் வந்தால், ‘ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம்' என்பார்கள். ஆனால், மருத்துவம் என்று வந்துவிட்டால், அதைச் செய்துதான் ஆக வேண்டும். நிமிடத்தில் செய்ய வேண்டும் என்றில்லை. நிதானமாகக் குணப்படுத்தினால் போதும். ஃபுட் கார்ன் (Foot corn) என்பதன் தமிழ் அர்த்தம் கால் ஆணி. இவை தடிமனான தோல் திட்டுகள். தோலின் வெளிப்புற அடுக்கு மாற்றத்தால் உருவாகும். இவை சிறியது, பெரியது என்று பல வகையில் காணப்படும்.