

எதையோ ஒன்றைச் செய்யப்போய் திடீரென்று அதிலிருந்து வேறொன்றைக் கண்டறிவதற்கு ஆங்கிலத்தில் ‘செரண்டிபிடி’ என்று பெயர்.
இத்தகைய செயல் ஒன்றை மைய மாக வைத்து ‘Serendipity’ என்கிற தலைப்பிலேயே 2001இல் ஒரு ஹாலிவுட் படம் வெளியானது. ஜான் கியூசாக், கேட் பெக்கின் சேல் எனப் பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தனர்.
கதைப்படி நாயகனும் நாயகியும் தற்செயலாக ஒரு கடையில் சந்தித்துக்கொள் வார்கள். அப்போது ஒருவர் மேல் மற்றொருவருக்கு ஏதோ
ஒருவித உணர்வு மேலிடும். உடனே இருவரும் ‘Serendipity’ என்கிற உண வகத்துக்குச் செல்வார்கள். அங்கே நாயகி தனது தொலைபேசி எண்ணை ஒரு தாளில் எழுதி நாயகனுக்குக் கொடுப்பார். ஆனால், அந்தத் தாள் காற்றில் பறந்து தொலைந்துவிடும். அப்போது “விதி மீது எனக்கு நம்பிக்கை உண்டு; நாம் இருவரும் சேரக்கூடாது என்பதே விதி” என்பாள் நாயகி. நாயகன் அதை மறுப்பான்.