ஒரு நாளைக்கு 100 பாட்டு! | காபி வித் ஷைனி

ஒரு நாளைக்கு 100 பாட்டு! | காபி வித் ஷைனி
Updated on
2 min read

தமிழ் ‘கண்டெண்ட் கிரியேட்டர்’ வட்டத்தில் தனித்துவமான பாணியில் காணொளிகளைப் பதிவுசெய்து வருபவர், ஷைனி. பாடல்களுக்கு ‘டப்ஸ்மேஷ்’ செய்வதில் தொடங்கி தமிழ் சினிமாவின் முக்கியப் பெண் கதாபாத்திரங்களைத் தன்னுடைய திறமையான நடிப்பால் மீட்டுருவாக்கம் செய்துவரும் அவரோடு ஓர் உரையாடல்.

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?

‘சன் செட்’ பார்ப்பது, இரவு நேரங்களில் ‘பின்ஜ் வாட்ச்’ செய்வதுதான் என்னோட வழக்கம். ‘ஷுட்’ இருக்கும் போது மட்டும்தான் காலையில் எழுந்திரிப்பேன்.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?

வாரத்தில் மூன்று நாள் வீட்டிலேயே ‘ஒர்க்-அவுட்’; பிடித்ததைச் சாப்பிடும் ‘ஃபுட்டி.’

தனித்துவமான பழக்கம்?

மகிழ்ச்சியோ வருத்தமோ எதுவா இருந்தாலும் என்னுடைய ‘டைரி’யை எடுத்து கவிதை எழுதத் தொடங்கிடுவேன். எனக்கு
நானே ஏதாவது சொல்லிக் கொண்டு அதை எழுதவும் செய்வேன்.

பொழுதுபோக்கு?

தினமும் 100 முதல் 150 பாடல்களையாவது கேட்கும் அளவுக்கு இசையைக் காதலிப்பவள்!

பிடித்த பாடல்?

நிறைய இருக்கே. ‘தொட தொட மலர்ந்ததென்ன...’ டாப் பாடல்!

மறக்க முடியாத தருணம்?

என்னுடைய சிறு வயது நினைவுகள்! நான், அப்பா, அம்மா, அண்ணா என நான்கு பேரும் எங்களுடைய பழைய வீட்டில் ஒரே கட்டிலில் தூங்கிய அந்த நாள்கள்!

இந்த வேலை இல்லையென்றால்?

நடனம் ஆடுவதில் கவனம் செலுத்தியிருப்பேன்!

எதிர்காலத் திட்டம்?

திரைக்குப் பின்னால் இயங்க வேண்டுமென்கிற கனவு உள்ளது. நிறைய இடங்களுக்குப் பயணம் செய்யவும் ஆசை.

பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்?

என்னுடைய ‘கரியர்’ தொடங்கிய இடங்கிறதால கண்டிப்பா இன்ஸ்டகிராம்தான்.

பின்பற்றும் ‘பாலிசி’?

எவ்வளவு பெரிய விஷயங்களைத் துரத்திச் சென்றாலும் எப்போதும் ‘Little things matter’.

அப்பா பிரபு சாலமன், குடும்பம் பற்றி?

ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் இயங்குவதைப் பார்த்து, இது வேண்டாமே என வீட்டில் தயங்கினார்கள். ஆனால், இன்றைக்கு அம்மாவும் அப்பாவும் என்னுடைய வேலையைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினரைத் தவிர என்னுடைய தோழிகள்தான் என்றைக்கும் என்னுடைய ‘சப்போர்ட் சிஸ்டம்.’

திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்?

தியேட்டரில் படம் பார்க்கப் பிடிக்கும். அதனால் தியேட்டருக்கு அவ்வப்போது செல்வேன். இதைத் தவிர கேரளத்தின் மூணாறு பகுதியில் மலைகள் சூழ இருக்கும் ‘மைனா’ பாயின்ட்.

‘கண்டெண்ட் கிரியேட்ட’ராக உள்ள சவால்?

பொதுத்தளத்துக்குச் சென்றதற்குப் பிறகு பாராட்டுகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டே ஆக வேண்டும் என அப்பா அட்வைஸ் சொல்லியிருக்கிறார். தேவையில்லாம வம்பு இழுக்கும் விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் நல்லது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in