

இந்தியர்கள் பொதுவாக கலாச்சார ரீதியாக சிக்கனம் மற்றும் சேமிப்பு பழக்கம் கொண்டவர்கள். குழந்தைகளின், திருமணம், ஓய்வுக்காலம் ஆகியவற்றுக்காக சிறிது சிறிதாக சேமித்து வைப்பது வழக்கம். பழங்காலம் முதலே இந்தியர்கள் அல்லது இந்திய குடும்பங்கள் சேமிப்பு பழக்கத்தில் உலகத்துக்கே முன்னோடியாக இருந்து வந்துள்ளனர்.
குடும்பங்களின் சேமிப்பு அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் உதவுவதில்லை - அது நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான முதலீட்டின் அடித்தளமாகவும் அமைகின்றது. இந்த சூழலில் சமீப காலமாக இந்திய குடும்பங்களின் சேமிப்பு சரிந்து வருவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.