

இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் விஎப்6 மற்றும் விஎப் 7 ஆகிய எஸ்யுவி கார்களை கடந்த செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.16.49 லட்சம் முதல் ரூ.25.49 லட்சம் வரை. இதுவரை 204 கார்களை (அக்டோபரில் 131) விற்றுள்ளது. அமெரிக்காவின் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நீண்ட இழுபறிக்குப் பிறகு டெஸ்லா ஒய் என்ற காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.59.89 லட்சம் முதல் ரூ.67.89 லட்சம் வரை. இதுவரை 118 கார்களை (அக்டோபரில் 40) விற்றுள்ளது.