

இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்காகச் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை 2017இல் ஏற்படுத்திக் கொண்டேன். இன்று வரை அது தொடர்கிறது. செய்தித்தாள் மட்டுமே வாசித்திருந்த நான் 2024இல் புத்தகங்கள் பக்கமாகத் திரும்பினேன். காரைக்குடி சிறார் எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததுதான் அதற்குக் காரணம். சிறார் நூல்கள் வாசிப்பதால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றி அங்கே தெரிந்துகொண்டேன். அது எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின் என் மகனுக்காகச் சிறார் நூல்களைத் தேடிப் பிடித்து வாங்கினேன். அவற்றை நானும் படித்தேன். கதை எழுதும் திறனும் கிடைத்தது. நான் எழுதிய சிறார் கதையை என் மகன் 2025 கலைத் திருவிழாவில் கதை சொல்லும் போட்டியில் சொல்லி, வட்டார அளவில் தேர்ச்சி பெற்றான். நான் எழுதிய சிறார் கதைகளைப் புத்தகமாக வெளியிடவும் முயற்சி மேற்கொண்டுவருகிறேன்.