

எனக்கு 43 வயதாகிறது. அடிக்கடி சீரற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. சில நேரம் பதற்றம் குழப்பம் போன்றவை ஏற்படுகின்றன. மருத்துவர் இது பெரிமெனோபாஸாக இருக்கலாம் என்கிறார். ‘பெரிமெனோபாஸ்’ என்றால் என்ன? - சரஸ்வதி, புதுக்கோட்டை.
45 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் முழுவதுமாக நின்றுவிடும் நிலையை மெனோபாஸ் என்பார்கள். ஒரு வருடத்துக்கு மாதவிடாயே வரவில்லை என்றால் அது மெனோபாஸ். இந்த நிலையில் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொ ஜெஸ்டீரோன் ஹார்மோன்களின் அளவு குறைந்து, சினைப்பை வேலைநிறுத்தம் செய்துவிடும். கருமுட்டை உருவாகாததால் மாதவிடாய் நின்றுவிடும்.