

ஒட்டுமொத்த வர்த்தகம், சந்தை மதிப்பு, சொத்து மதிப்பு அடிப்படையில் உலக அளவில் முன்னணியில் உள்ள 100 வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) (43), ஹெச்டி எப்சி (73) ஆகிய 2 வங்கிகள் உள்ளன.
இந்த சூழ்நிலையில், 2047-ல் ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை எட்டுவதற்கு உலகின் 20 முன்னணி வங்கிகளில் குறைந்தது 2 இந்திய வங்கிகளாவது இடம்பெற வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது. இதற்காக நாட்டில் உள்ள சிறிய பொதுத்துறை (அரசு) வங்கிகளை பெரிய வங்கிகளுடன் மீண்டும் ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.