

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் தெய்வானை. இரண்டு குழந்தை களுக்குத் தாய். திருமணம் முடிந்து புகுந்த வீடு, குழந்தைகள் என்றான பிறகுதான் ஓவியம் வரைவதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ‘ஹோம் மேக்கர்’ பொறுப்புக்கு நடுவே கிடைத்த நேரத்தில் ஓவியக் கனவை நனவாக்கிவருகிறார்.
இந்தியப் பாரம்பரிய ஓவிய முறைகளைக் கற்க வேண்டுமென்பது தெய்வானையின் விருப்பம். “என் தோழியின் உதவியோடு சில ஓவிய முறைகளை வரையப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். வாரம் ஒரு முறை ஓவியப் பயிற்சிக்காக நேரம் ஒதுக்குகிறேன். தஞ்சாவூர் ஓவியம், கேரள மியூரல் ஓவியம், ஒடிசா பட்டச்சித்ரா ஓவியம் போன்றவற்றை முறையாகக் கற்றுவருகிறேன். இன்னும் சில ஓவிய முறைகளை வரையப் பயிற்சி எடுத்துவருகிறேன்” என்கிறார் தெய்வானை.