

சன் டிவியின் ‘கல்யாணம்’ தொடருக்குக் கதை, வசனம் எழுதிய பட்டுகோட்டை பிரபாகரிடம் உதவியாளராகச் சேர்ந்தபோது, “என்ன வேலை செய்கிறீர்கள்?” என்றார். “ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கேன்” என்றேன். “புரியல. என்ன சொல்றீங்க?” என்றார் விழிபிதுங்க.
“என் மனைவி ஆசிரியையாக வேலை செய்கிறார். எனக்கேத்த வேலை இன்னும் அமையாததால் குடும்பத்தைக் கவனிக்கிறேன். குழந்தையைத் தயார் செய்து ஸ்கூலுக்குக் கொண்டு போய் விடுவேன். சமைத்த பாத்திரங்களைக் கழுவி வைப்பேன். வீடு பெருக்கித் துணி துவைத்துக் காயப் போடுவேன்.”
“என்ன சார் இப்படி வெளிப்படையா சொல்றீங்க?” எனச் சிரித்தார் பி.கே.பி.