

எனக்கு வயது 48. குடிப்பழக்கம் அல்லாத ஃபேட்டி லிவர் பிரச்சினை யைச் சரிசெய்வது சாத்தியமா? - ராஜசேகர், திருத்தணி.
இதற்குப் பதில் அளிக்கிறார், மருத்துவப் பேராசிரியர் டாக்டர் முத்து செல்லக் குமார். கண்டிப்பாகச் சரிசெய்யலாம். இதைத் தற்போது ‘வளர்சிதை மாற்ற பிரச்சினையால் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு பாதிப்பு’ (Metabolic dysfunction-associated steatotic liver disease (MASLD) என்று அழைக்கின்றனர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துக்கொண்டவர் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திப்பாரோ, அதைப் போலவே இயல்பாகவே கல்லீரலில் இருக்கும் கொழுப்பைவிட அதிக அளவு சேரும்போது, அது பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஆட்படும்.