

யதார்த்தமாக நடிப்பதில் திறன் வாய்ந்த நடிகை, எழுத்தாளர், இயக்குநர் எனப் பன்முகம் காட்டி வருபவர் செம்மலர் அன்னம். அவரது இயக்கத்தில், நியூட்டன் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மயிலா’.
உலக அரங்கில் சுயாதீனத் திரைப்படங்களுக்கு அசலான அங்கீகாரக் களம் என இயக்குநர்கள் கொண்டாடிவருவது ராட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா (IFFR). அதன் 55வது பதிப்பு 2026 ஜனவரி 29ஆம் தேதி தொடங்குகிறது.