

மனித குலத்தை ஆன்மிக பாதைக்கு சமூக நல்லிணக்கத்துடன் அழைத்துச் சென்றவர்கள் தான் சித்தர் பெருமகனார். சிவபெருமான் அருளால் சித்தி பெற்ற இவர்களில் முக்கியமானவர்கள் எனச் சொல்வது பதினெண் சித்தர்கள். இவர்களில் நந்திதேவரை சித்தர் பரம்பரையில் முதலாவது சித்தராக அழைப்பதுண்டு. சிவபெருமானின் ஞான வடிவான ஸ்ரீதட்சிணா மூர்த்தியிடம் சிவயோக முனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என்கிற நால்வர் (சித்தர்கள்) ஞானஉபதேசம் பெற்றனர் எனப் பாடியுள்ளனர்.
சித்தர்கள் ஆன்மிகத்தை மட்டும் போதிக்காமல், செந்தமிழால் தங்களின் பாடல் மூலம் மருத்துவம், ஜோதிடம், கலை, விஞ்ஞானம், தத்துவம் போன்றவற்றைப் பற்றி நுணுக்கமான விஷயங்களை நமக்கு பாடல்களால் நம்முடைய சிந்தையை தெளிவுப்படுத்தியுள்ளனர்.