

நான்கு வேதங்களை ஓதும் வேத விற்பன்னர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பதால், சதுர்வேத மங்கலம் என்று அழைக்கப்படும் இவ்வூரில் அருள்பாலிக்கும் ஈசன், தீராத நோய்கள் தீர்ப்பவராக போற்றப் படுகிறார்.
தல வரலாறு: ஒரு யாகம் நடத்துவது தொடர்பான பிரச்சினையில் பிரம்மதேவர், துர்வாசரின் சாபத்துக்கு ஆளானார். சாபவிமோசனம் பெற பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஓரிடத்தில், ஆங்கீரச முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை கண்டார். அவரது ஆலோசனையின்படி, அந்த இடத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி சாபம் நீங்கப் பெற்றார்.