

தற்போதைய காலத்துக்கேற்ற, ப்ரீகாஸ்ட் பேனல்கள், 3D வால்யூமெட்ரிக் கட்டுமானம், மற்றும் இன்சுலேடிங் கான்கிரீட் ஃபார்ம்வொர்க் (ICF) போன்ற புதிய மற்றும் மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நவீன கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நவீன கட்டுமான முறைகளை பயன்படுத்தி பாரம்பரிய முறைகளை விட வேகமாகவும், குறைந்த செலவிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டிடங்களின் நிலைத்தன்மை, பசுமை ஆற்றல் பயன்பாட்டையும் அதிகரிக்க இந்த கட்டுமான முறைகள் பெருமளவில் உதவுகின்றன.