

என் தோழி காரணமே இல்லாமல் அடிக்கடி கோபப்படுகிறாள். சிலநேரம் அளவுக்கு மீறிக் கத்துகிறாள். பிறகு அதை நினைத்து வருத்தப்படுகிறாள். எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாள். வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. யார் என்ன சொன்னாலும் அவள் செய்வதுதான் சரியென்று வாதிடுகிறாள். மனநல ஆலோசகரைப் பார்க்கலாம் என்று சொன்னால் நான் என்ன மனநோயாளியா என அதற்கும் கோபப்படுகிறாள். இவளது இந்த நடவடிக்கையால் வீட்டிலும் யாருக்கும் நிம்மதி இல்லை. என்ன செய்வது? - பெயர் வெளியிட விரும்பாத கோவை வாசகி.
மருத்துவரிடமும் வழக்கறி ஞரிடமும் உண்மையை மறைக்கக் கூடாது என்பார்கள். ஆனால், நம் மக்களுக்கோ உண்மையை வெளிப் படுத்துவதிலும் ஏற்றுக்கொள்வதிலும் தயக்கம் இருக்கிறது. குறிப்பாக, மனநல மருத்துவச் சிகிச்சையில் பலரும் உங்கள் தோழியைப் போல உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், சிகிச்சை பெறுவதற்கான தாமதமும் சிலநேரம் ஏற்படுகிறது.