

உலகில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் மரணங்களில் ஐந்தில் ஒரு மரணம், வயிற்றுப்போக்கால் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் இந்த வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 4.43 லட்சம் பேர் வயிற்றுப்போக்கால் மட்டுமே மரணமடைகிறார்கள். இந்த 4.43 லட்சம் பேரில் பெரும் பான்மையினர் தெற்கு ஆசிய, ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட வளர்ந்துவரும் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களில் ஆண்டுதோறும் 250 கோடி பேருக்கு வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கை ஏற்படுத்து வதில் ரோட்டா வைரஸ் உள்ளிட்ட வைரஸ்கள் பெரும்பங்கு வகிக் கின்றன. காலரா, ஷிகெல்லா உள்ளிட்ட பாக்டீரியாக்களும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடியவை. வளரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற குடிநீர், உணவு ஆகியவற்றால் வயிற்றுப்போக்கு என்பது இங்கு அன்றாட நிகழ்வாக இருக்கிறது.