

தத்துவ அறிஞர் நீட்ஷே நிறைய எழுதிக் குவித்தவர். அவருக்கு உடல்நலக் குறைபாடுகள் உண்டாகத் தொடங்கின. மிகக் கடுமையான தலைவலி, பார்வைக் குறைபாடுகள். கையால் எழுத முடியவில்லை. அதனால், அவர் 1882வாக்கில் ஒரு தட்டச்சு இயந்திரத்தை வாங்கினார்.
அதன்பிறகு அவர் தொடர்ந்து எழுதினார் (தட்டச்சு இயந்திரம் மூலம்). ஆனால், அவரது எழுத்துகளின் தரம் மாறிவிட்டதாக விமர்சகர்கள் கருதினார்கள். நீண்டநீண்ட வாக்கியங்களாக வாதங்களை எழுதிவந்த அவர், தட்டச்சு இயந்திரம் வந்தவுடன் சுருக்கமாக எழுதத் தொடங்கினார். நீண்ட பத்திகளுக்குப் பதில் பொன்மொழிகள் போல் ரத்தினச் சுருக்கமாக எழுத ஆரம்பித்துவிட்டார் என்றனர் விமர்சகர்கள்.