

இயக்குநராக முத்திரை பதித்த பின், நட்சத்திர நாயகனாகவும் சாதித்துக் காட்டிய அதிசயம் இந்தி சினிமாவில் முன்னதாக நடந்திருக்கிறது. இப்போது பிரதீப் ரங்கநாதன் வடிவில் கோலிவுட்டிலும் அது அரங்கேறியிருக்கிறது! ‘கோமாளி’ (2019) படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக அறிமுகமான இவர், ‘லவ் டுடே’ (2022) மூலம், 2கே, ஜென் இசட் கதைக் களத்தைக் கையாண்டு நாயக நடிகராகவும் வெற்றியைப் பெற்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘டிராகன்’ அவரை முன்வரிசை நட்சத்திர மாக்கிவிட்டது. இப்போது தீபாவளிக் கொண்டாட்டத்தில் வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது ‘ட்யூட்’.