

எத்தனை விதமான ராமாயண காவியங்கள் படைக்கப்பட்டாலும், ஒவ்வொன்றிலும் சிற்சில மாற்றங்கள் இருக்கின்றன. ஆனால் காவியங்களின் நோக்கம் ஒன்றாகவே இருந்து, அறத்தை வலியுறுத்தி, அறவழி தகவல்களை எடுத்துரைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. “இராமகதை பலராலும் பலமுறை எழுதப்பட்டுவிட்டது.
ஆனாலும் மீண்டும் எழுதுகிறேன். ஒவ்வொரு நாளும் உணவருந்துகிறோம் என்பதற்காக உண்ணாமல் விட்டுவிடுவோமா? இராமகதையும் இப்படித்தான் – எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம், வாசிக்கலாம், நேசிக்கலாம்.” - இராம நாமத்தின் பெருமையை இவ்வாறு விவரிப்பவர் யார் தெரியுமா? ஆதுகூரி மொல்ல (அல்லது மொல்ல மாம்பா) என்னும் 15-ம் நூற்றாண்டு தெலுங்குக் கவிதாயினி.