

ஓரிரு நாள்களிலேயே கைவிடக்கூடிய அளவில்தான் பலருக்கும் புத்தாண்டுக்கு இலக்கு இருக்கும். ஆனால், புதுச்சேரி திவ்யா வித்தியாசமானவர். தமிழர்களை ஒருங்கிணைத்து இமயமலைத் தொடரில் மனிதர் ஏறாத சிகரத்தில் குழுவாக ஏறி அதற்குத் தமிழில் பெயர் சூட்டுவதை இலக்காக நிர்ணயித்துள்ளார்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு அருகேயுள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவ்யா, கட்டிடக்கலைப் படிப்பை முடித்தவர். சிறுவயதில் அம்மா இறந்ததால் தாத்தா, பாட்டி துணையோடு வளர்ந்தார். படித்த பிறகு பயிற்சிக்காக புணேயில் இருந்தபோது மலையேற்றத்தில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. வீட்டு நினைப்பு இவரை ஊர் திரும்ப வைத்தது. நில குத்தகை மூலம் விவசாயம் செய்த தாத்தாவைப் பின்பற்றி, திருமணத்துக்காக வைத்திருந்த நகையை வைத்து ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் திவ்யா ஈடுபட்டார். அதில் வருவாய் கிடைத்தபோதும் கரோனாவால் நஷ்டம் ஏற்பட்டது. “பல லட்சங்கள் முடங்கின. பண்ணையில் இருந்த கோழிகள் மூலம் கறிக்கடை அமைத் தோம். கடனை அடைக்கப் பண்ணையை மூடினோம்.