Published : 13 Jul 2018 10:27 AM
Last Updated : 13 Jul 2018 10:27 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: எளியவர்களின் காதல்!

‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கிக் கவனிக்க வைத்தவர் கீரா. இவர் இயக்கும் மூன்றாவது படம் ‘பற’. ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் போராடும் மக்கள் வழக்கறிஞராக சமுத்திரக்கனி முதன்மைக் கதாபாத்திரம் ஏற்க, அவரது பாதுகாப்பில் வாழும் காதலர்களாக நடித்திருக்கிறார்கள் சாந்தினியும் சாஜீ மோனும். “இது எளிய மக்களின் வலிமையான காதலை மாநகரப் பின்னணியில் யதார்த்தத்துடன் சித்தரிக்கும் படம். ஓர் இரவில் தொடங்கி பகலில் முடியும் 12 மணி நேரக் கதை” என்கிறார் கீரா.

உறுதியானது வெளியீடு!

‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் படம் ‘2.0’. இது 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிவருவதால் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் கோரும் காலஅவகாசம் காரணமாக வெளியீடு தாமதமாகி வந்தது. ஆனால், தற்போது வேலைகள் விரைவில் முடிந்துவிடும் என்றும், வரும் நவம்பர் 29-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் படத்தின் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.
 

13chrcj_Director Dr.Vimala Perumal (5) விமலா பெருமாள் கடல் கடந்து...

முழுவதும் தமிழகத்தில் தயாராகும் தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியிடப்படுகின்றன. ஆனால், பல நாடுகளில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்த தங்கள் வாழ்வியலை மையமாக்கிப் படைக்கும் படங்கள் ஏன் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று நினைத்திருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த பெண் தமிழ் இயக்குநரான விமலா பெருமாள். மலேசியத் தமிழர்களின் வாழ்வியலை மையப்படுத்தி அவர் இயக்கிய ‘வெடிகுண்டு பசங்க’ என்ற படத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அதை இங்கே வெளியிடுகிறார். “படத் தலைப்புதான் இப்படி இருக்கிறதே தவிர, படம் தரப்போகும் அனுபவம் தமிழ் ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும்” என்கிறார் இயக்குநர்.

 

‘விக்ரம் வேதா’ ஜோடி!

‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனும் விஜய்சேதுபதியும் விக்ரமாதித்தன் - வேதாளம்போல் இணைந்து கலக்கியிருந்தார்கள். அதைப்போலவே அந்தப் படத்தில் மாதவன் - ஷ்ரதா ஸ்ரீநாத், கதிர் - வரலட்சுமி ஜோடிகள் பேசப்பட்டன. இவர்களில் மாதவன் -ஷ்ரதா ஜோடி ‘மாறா’ என்ற புதிய படத்தில் மீண்டும் இணைய இருக்கிறார்களாம். ‘கல்கி’ என்ற குறும் படத்தை இயக்கிய திலீப் குமார் இந்தப் படத்தை இயக்குகிறாராம்.
 

13chrcj_rishma ரிஷ்மா rightமும்பையிலிருந்து...

தாமதமாகத் தொடங்கினாலும் அறிவியல் புனைவுக் கதைகளை ஆர்வத்துடன் கையாளத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. அந்த வரிசையில் மருத்துவ ஆராய்ச்சித் துறையில் இன்று வேகமெடுத்திருக்கும் சில ஆய்வுகளின் பின்னணியைக் களமாக்கி, அறிவியல் புனைவு திரைப்படமாக உருவாகிவருகிறது ‘நகல்’. ஏ.ஆர்.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நாயகனாக நடித்து அறிமுகமாகும் இந்தப் படத்தில், மும்பை மாடல் ரிஷ்மா நாயகியாக அறிமுகமாகிறார்.

த்ரில் நட்பு!

“உறவுகளின் பாசத்தையும் காதலின் மேன்மையையும் தாண்டி சமூகத்தில் காலம் காலமாகப் போற்றப்படுவது நட்பு. காதலை... விரும்பாதவர்கள் இருக்கலாம். ஆனால், நட்பை விரும்பாதவர்கள் குறைவு. அப்படிப்பட்ட நட்பை மையமாக வைத்து ஆயிரம் படங்கள் வந்தாலும் நட்பை நம்பகமாகச் சித்தரித்த படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நட்பை முதன்மைப் படுத்தி, அதை உரசிப் பார்க்கும் காதலை இரண்டாம் இடத்தில் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு ஃபிரெண்ட்ஷிப் த்ரில்லர் படம் இது” என்கிறார் ‘பிரம்ம புத்ரா’ படத்தை எழுதி, இயக்கியிருக்கும் தாமஸ்.

தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்று ‘யு’ சான்றிதழும் பெற்றிருக்கும் இந்தப் படத்தை கோல்டன் மீடியாஸ் சார்பில் தயாரித்திருப்பவர் டாக்டர் தினேஷ் பாபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x